கோவை: சமீப காலமாக சிறார்கள் செல்போன் பறிப்பு, கொள்ளை, வழிப்பறி, கொலை போன்ற கொடிய வழக்குகளில் சிறுவர்கள் அதிகம் கைதாகிறார்கள் . இதில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் கைதாவது தான் அதிர்ச்சியின் உச்சமாக உள்ளது.
பெற்றோர்களின் சரியான முறையில் நேரடி கண்காணிப்பில் இல்லாத சிறார்களுக்கு சரி எது, தவறு எது என்று தெரியாமல் தவறான வழியில் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். சிறார் குற்றங்களுக்கு குடும்ப சூழ்நிலையும் முக்கியமான காரணமாக தெரிகிறது. சிறார் குற்றங்களுக்கு பெற்றோரின் அளவுக்கதிகமான கண்டிப்பு, சந்தேகம், வெறுப்பு புறக்கணிப்பு போன்றவை அவர்களை குற்றவாளியாக்கிறது.
அத்துடன் சமூக விரோதிகள் தனது சொந்த ஆதாயத்திற்காக சிறார்களை மதிமயங்கி மதுவிற்கு அடிமை படுத்தி குற்றச்செயலை செய்ய தூண்டுவதும் இளம் குற்றவாளிகளை உருவாக்கும் காரணிகளாக தெரிகிறது.
சின்னச் சின்ன தவறுகள் செய்யும் போது மன்னிக்கும் மனநிலை உருவாகாத போது அவர்களை பெரிய குற்றவாளியாக உருவாக்குகிறது.
எனவே, குற்றம் செய்த குழந்தைகளை குற்றவாளிகள் என அணுகாமல், சட்டத்திற்கு முரணான குழந்தைகள் என்று அணுகுவது சமூகத்தில் நிகழும் குற்றங்களின் அளவைக் குறைக்க உதவும்.
எனவே இன்று கோவை மாநகர் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு. பாலாஜிசரவணன் அவர்களின் அறிவுறுத்தலின் படி கோவை மாநகர மது விலக்கு காவல் ஆய்வாளர் திரு. கணேசன் தலைமையில் மதுவிலக்கு போலீசார் அரசு சிறுவர் கூர் நோக்கு இல்லம் சென்று அங்கு தங்கி இருக்கும் குற்ற சாட்டப்பட்ட சிறுவர்களை சந்தித்து அவர்களின் எதிர்கால முன்னேற்றம், மதுவிலக்கு விழிப்புணர்வு பற்றி கலந்து பேசி எடுத்து கூறியும், குழந்தை நல்வாழ்வு மைய உறுப்பினர்களுடன் இணைந்து இளஞ்சிறார்களுக்கு சிறு சிறு விளையாட்டுகள் நடத்தி மகிழ்வித்தும், அவர்களுக்கு பயன்படும் வகையில் காட்டன் ஆடைகள் தண்ணீர் குவளைகள் வழங்கி, மதிய உணவும் ஏற்பாடுசெய்து கொடுத்தனர்.
இது போன்று புதிய முயற்சிகளால் சிறுவர்களின் மனநிலைமாறி நல்வழிபட வாய்ப்புள்ளதாக சிறார் நீதி குழுமம் உறுப்பினர் திரு சாம்சன் கூறினார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்