திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே நடைபெற்ற ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என காவல் துறையினர் வலியுறுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் காவல்துறையினர் சார்பில், அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து ஊராட்சிகளிலும் குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதில் கும்மிடிப்பூண்டி காவல் ஆய்வாளர் திரு.சக்திவேல், உதவி ஆய்வாளர் திரு.சந்திரசேகர் மற்றும் ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்