தஞ்சாவூர்: கும்பகோணம் நகராட்சி பதினைந்தாவது வார்டுக்குட்பட்ட வினைதீர்த்தான் தெருவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக (கழிவு நீர்) சாக்கடை நீர் குளம்போல் தேங்கி உள்ளதால் கொசு மற்றும் டெங்கு காய்ச்சல் மற்றும் பல தொற்று நோய்கள் வரும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பலமுறை நகராட்சி அலுவலகத்தில் தெரிவித்தும் அதனை கண்டும் காணமல் இருக்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, (7-12-2019 வெள்ளிக்கிழமை) இன்று காலை 12 மணி அளவில் 15வது வார்டு பொதுமக்கள் கும்பகோணம் தஞ்சாவூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த உடன் வந்த கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் .
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்