திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 71-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தேசிய கொடி ஏற்றிவைத்து மூவர்ண பலூன்களையும், புறாக்களையும் வானில் பறக்கவிட்டார்.
பின்னர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையிலான காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொண்டார். பின்னர் காவல்துறைக்கு தமிழக அரசின் பதக்கம் வழங்க பட்டது.
இதில் மீஞ்சூர் காவல் நிலைய தலைமை காவலர் ரமேஷ் அவர்களுக்கு வழங்க பட்டது. பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்தும் மரியாதை செலுத்தினார். குடியரசு தின விழாவையொட்டி பல்வேறு அரசு துறைகளில் மூலமாக ரூ.1.கோடியே 76 லட்சத்து, 64 ஆயிரத்து 521ரூபாய் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.
இதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு பாரம்பரிய கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்