திருச்சி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் IPS , அவர்களின் உத்தரவின் பேரில் திருவேறும்பூர் உட்கோட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ASP.திரு. பிரவீன் உமேஷ் டோங்ரே IPS அவர்களின் மேற்பார்வையில் திருவெறும்பூர் காவல் நிலைய எல்லையில் டூவீலர்கள் திருடு போனது தொடர்பாக இன்ஸ்பெக்டர் திரு.ஞானவேலன் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் CCTV footage களை ஆய்வு செய்து அதன்மூலம் தஞ்சாவூர் மாவட்டம் வீரசிங்கம்பேட்டையை சேர்ந்த அகஸ்டின் என்பவனை கைது செய்தனர். அவனிடமிருந்து 30 டூவீலர்கள் மற்றும் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உரிய காவல் நிலையங்கள் மூலமாக வாகனங்கள் உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டது .
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி