சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப
அவர்கள் காவல் ஆளிநர்களின் நலனை மேம்படுத்த, ஆயுதப்படை காவலர்களுக்காக Women Empowerment Refreshing Training என்ற 5 நாட்கள் சிறப்பு புத்தாக்க பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பணியிலும், குடும்ப வாழ்விலும் சிறந்து விளங்க சமநிலை வாழ்வுமுறை (Work Life Balancs) என்ற 3 நாட்கள் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், ஆளிநர்கள் அழுத்தத்திலிருந்து விடுபட்டு புத்துணர்ச்சியுடன் பணிபுரியவும், அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கிடவும் .
காவல் நலவாழ்வு மையம் துவங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (20.11.2021) மதியம் சென்னை, வேளச்சேரி, குருநானக் கல்லூரி வளாகத்திலுள்ள, சாகிப் தீப்சிங் ஆடிட்டோரியத்தில், காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக காவல் நலவாழ்வு 2.0 மையத்தை (Police Well being 2.0 Cente) திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.