கோவை : கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் கோவை சைபர் கிரைம் ஆய்வாளர் அருண் தலைமையில் தனிப்படையைச் சேர்ந்த போலீசார் olx பக்கத்தில் மொபைல் போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் விற்பதாக கூறி தொடர்பு இல்லாத பல்வேறு நபர்களின் ஆதார அட்டைகளை அடையாளங்களாக பயன்படுத்தி பல்வேறு நபர்களிடமிருந்து லட்சக்கணக்கான பணத்தை ஆன்லைனில் சுருட்டிய நபர்கள் இருவரை பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு தமிழக முழுவதும் எட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. மேலும் பல்வேறு வழக்குகள் அவர் மேல் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு புகார் கொடுக்குமாறு சைபர் கிரைம் போலீசார் கூறியுள்ளனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்