மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி இன்று மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்பு பகுதிகள் மற்றும் மதுரை மாநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு காய்ச்சலை தடுக்க மருந்துகள் தெளிக்கப்பட்டன.
மேலும் மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரும் கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும்படி மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1. வீடுகளில் சரியாக மூடப்படாத தண்ணீர் தொட்டிகள்,
2. தோண்டப்பட்ட குழிகள்,
3. மொட்டைமாடிகளில் உள்ள உபயோகமற்ற பொருள்கள்,
4. காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள்,
5. பயனற்ற பிளாஸ்டிக் பொருள்கள்,
6. வீடுகளில் சரியாக மூடப்படாத தொட்டிகள்,
7. திறந்த நிலையில் உள்ள மேல்நிலைத் தொட்டிகள்,
8. உபயோகமற்ற பழைய டயர்கள்,
9. பயன்படுத்தப்படாத உடைந்த சிமென்ட் தொட்டிகள்,
10. நீண்டகாலமாக கழுவப்படாத தொட்டிகள்
போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் ஏடிஸ் கொசுக்கள் (Aedes mosquito) முட்டையிட்டு, அது புழுவாக மாறி வளர்ந்து, கொசுவாக உருவாகிறது. இது, டெங்கு பாதிப்புள்ளவர்களைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு டெங்கு பரவுகிறது. எனவே `ஏடிஸ்’ கொசுக்கள் உருவாகும் இடங்களை அழித்து வீடுகள், பள்ளிக்கூடங்கள், பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டால் மட்டுமே டெங்குக் காய்ச்சலைத் தடுக்க முடியும்.”
மேலும் டெங்குக் காய்ச்சலை தடுக்க நிலவேம்புக் குடிநீர் மிகச்சிறந்த மருந்து.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை