இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் (04.10.2024) தேதி குற்றச்செயல்கள் தடுக்கும் பொருட்டு இராணிப்பேட்டை உட்கோட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.திருமால் அவர்கள் தலைமையிலும் அரக்கோணம் உட்கோட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.வெங்கடேசன் அவர்கள் தலைமையிலும் காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர வாகன சோதனை மற்றும் இரு சக்கர வாகனம் ரோந்து போன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.