திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் நினைவிடத்தில் அக்டோபர் 21- ம் தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையில் வீரமரணம் அடையும் காவலர்களை நினைவுகூறும் விதமாக திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு.ஜோஷி நிர்மல் குமார் இ.கா.ப அவர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் வீரமரணமடைந்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு வீரமரணமடைந்த காவலர்களுக்கு தங்கள் மரியாதையை செலுத்தினார்கள். மேலும் வீரமரணமடைந்த காவலர்கள் நினைவாக மரக்கன்றுகளை ஊன்றினார்கள் .
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் நிலையத்திலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்றனர்.