சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று காவலர் வீரவணக்க நிகழ்ச்சி மாவட்ட ஆயுதபடையில் உள்ள காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு. ஜெயகாந்தன் IAS அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் திரு. சீமான் அவர்கள் காவலர்களை வழிநடத்தி மரியாதை செலுத்தினார். மேலும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.