திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள பழனி மஹாலில் 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமின் நிறைவு நாளில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சுந்தரவதனம் அவர்கள் கலந்துகொண்டு காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கியும் அறிவுரைகளையும் கூறினார்கள். மேலும் த.சி.கா 14ஆம் அணியில் பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.விவேகானந்தன் அவர்கள் காவலர் நிறைவாழ்வு பயிற்சி நிறைவு நாளில் காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி அறிவுரை வழங்கினார்கள்.