திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் காவல் துறையில் பணிபுரிந்து இறந்த காவலர்களின் இரண்டு குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 50,000/- வீதம் 1 லட்சம் ரூபாயும், காவலர்களின் குடும்பத்தில் மறைந்த தாய் மற்றும் தகப்பனார் ஆகியோரின் ஈமக்கிரியை செய்த வகையில் 6 காவலர்களுக்கு தலா ரூபாய் 10,000/-வீதம் ரூபாய் 60,000/-ம் மற்றும் காவலர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு செலவு செய்த 13 காவலர்களுக்கு ரூபாய் 2,36,800/- ஆக மொத்தம் ரூபாய் 3, 96,800/- பணத்தினை தமிழ்நாடு காவலர் நல நிதியிலிருந்து மாவட்ட கண்காணிப்பாளர் உயர்திரு. இரா. சக்திவேல் அவர்களால் வழங்கப்பட்டது.