இராமநாதபுரம்: 2019-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்), சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உடற்தகுதிக்காண தேர்வில் எளிதில் தேர்ச்சி பெறும் வகையில், இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட விளையாட்டுதுறை இணைந்து வருகின்ற 09.10.2019-ம் தேதி முதல் இராமநாதபுரம் ஆயுதப்படையில் இலவச பயிற்சி முகாம் நடத்த உள்ளது. மேலும், இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 09.10.2019-ம் தேதி காலை 06.00 மணியளவில் இராமநாதபுரம் ஆயுதப்படையில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மேற்படி இலவச பயிற்சி முகாமினை பயன்படுத்திக்கொண்டு, அடுத்த கட்டமாக நடைபெற உள்ள உடற்தகுதிக்காண தேர்வில் எளிதில் வெற்றி பெற வாழ்த்துக்களுடன் அறிவுறுத்தப்படுகிறது.