சென்னை: காவலர்கள் பணி பெரும் பணி, அவர்கள் எவ்வளவு சிரமத்தில் இக்கட்டான சூழலில் நமக்காக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
தொற்று எளிதில் அவர்களை தாக்கலாம் என்று தெரிந்தும்இ மக்களுக்காகவும் நாட்டுக்காகவும் அனைவரின் நலனுக்காக தங்கள் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் தினமின்னிதழின் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, வடசென்னை துணை மாவட்ட தலைவர் (குடியுரிமை நிருபர்கள் பிரிவு) தா.அப்துல் ஹபீஸ் மற்றும் மத்திய சென்னை செயலாளர் (குடியுரிமை நிருபர்கள் பிரிவு) ஆர். பார்த்த சாரதி ஆகியோர் நேற்று காலை முதல் மாலை வரை (அண்ணா சாலை, ஜெமினி, எழும்பூர், சேத்துப்பட்டு, மின்ட், பாரிஸ், ராயபுரம், தண்டயார்பேட்டை) ஆகிய இடங்களுக்கு சென்று, காவலர்களின் இந்த சேவையை ஊக்கு விக்கும் விதமாக அவர்களுக்கு சிற்றுண்டிகள் மற்றும் குளிர் பானங்கள் கொடுத்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிரூபர்கள் அனைவரின் சார்பிலும், “மக்களுக்காக பணியாற்றும் காவலர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதற்கு காவலர்கள், முக மலர்ச்சியுடனும், சந்தோஷத்துடனும் வரவேற்றனர்.
மேலும், சாலையில் ஓரமாக இருக்கும் ஆதரவற்ற ஏழைகளுக்கும், குழந்தைகளுக்கும் சிற்றுண்டி மற்றும் குளிர்பானம் கொடுத்தனர்.
நமது வீட்டின் அருகில் இருக்கும் அனைத்து காவலர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்து நம் அன்பை வெளிப்படுத்துவோம்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை