புதுக்கோட்டை: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி 2024 கையுந்து பந்து (Volleyball)விளையாட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் பெண்கள் அணியினர் முதல் இடம் பிடித்து தங்கம் பதக்கம் பெற்று காவல்துறையினருக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேற்கண்ட வெற்றி பெற்ற 7 பெண் காவல் ஆளிநர்களை (27.09.2024) புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்கள் நேரடியாக வரவழைத்து பாராட்டினார்கள்.