திருப்பூர்: அவசர காலத்தில் பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை சார்பில் செயல்படும் காவலன் செயலியை அவினாசி போக்குவரத்து ஆய்வாளர் திரு.சதாசிவம் அவர்களின் தலைமையில் விழிப்புணர்வு நடைபெற்றது. மற்றுமொரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவினாசி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. சரஸ்வதி கலந்து கொண்டு அப்பகுதி பொதுமக்களுக்கு காவலன் செயலி குறித்து எடுத்துரைத்தார்.
காவலன் செயலி தமிழக காவல்துறையினரால் தொடங்கப்பட்டு நடைமுறையில் இருந்துவருகின்றது. இச்செயலியை Google Play Store மூலமாக அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் காவல்துறையினரின் அவசர உதவியை பெறமுடியும். இச்செயலியில் உள்ள சிவப்பு குறியீட்டை அழுத்தினால் தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்று¸ தாங்கள் இருக்குமிடத்தை GPS மூலமாக அறிந்து கொள்ள முடியும். உடனே அவர்கள் சம்பந்தப்பட்ட காவல்துறையினரை அணுகி தகவல் தெரிவித்து குறைந்த நேரத்தில் காவலர்கள் தங்களது இடத்திற்கு வந்து உங்களுக்கு உதவி செய்வார்கள். மேலும் இச்செயலி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மாணவிகளிடத்தில் எடுத்துரைத்தார்.
[embedyt] https://www.youtube.com/watch?v=YD0ZY-lIWyE[/embedyt]
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்