சேலம்: சேலம் பழைய சூரமங்கலம் கபிலர் தெருவை சேர்ந்த முவின் குமார் என்ற இளைஞருக்கும், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, காதல் மலர்ந்துள்ளது.
அவர்களின் பெற்றோருக்கும் தெரியவந்ததால், காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள ஆறுபடையப்பன் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு சேலம் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். காதல் ஜோடியின் பெற்றோரிடமும் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திருமதி. சூர்யா பிரியா
சேலம் மாவட்ட தலைவி
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா