திருப்பூர்: காங்கேயம் உட்கோட்டம் காங்கேயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமபட்டினம் பகுதியில் குற்றத்தடுப்பு மற்றும் மது விலக்கு குற்றங்கள் சம்பந்தமாக தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கோவர்த்தனாம்பிகை அவர்கள் ரோந்து பணி மேற்கொண்டிருந்த போது சந்தேகத்திற்கு உட்பட்டு சிவக்குமார் (40) என்ற நபரை சோதனை செய்தபோது கஞ்சா எனும் போதை பொருளை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இதனையடுத்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்த 1 கிலோ 50 கிராம் அளவுள்ள கஞ்சா பொருள் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
M.வெங்கடாசல மூர்த்தி
திருப்பூர்