திருவள்ளூர் : கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் ஆதரவற்ற மக்கள் வீட்டினுள் இறுக்கின்றனர். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் கும்மிடிப்பூண்டி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் மேற்பார்வையில் கவரபேட்டை காவல் நிலையம் சார்பில் அடம்பாக்கம். இருளர்காலனி ஆகிய பகுதிகளுக்கு கும்முடிப்பூண்டி காவல் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் கவரபேட்டை உதவி ஆய்வாளர் சிவராஜ் ஆகியோர் உணவு மற்றும் முகக்கவசம் வழங்கினர் இதில் கவரபேட்டை காவலர்கள் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன் மற்றும்

திரு. J. தினகரன் நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா திருவள்ளூர்