திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கவரபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவையும் மீறி பொதுமக்கள் கூட்டமாக வீதிகளில் நடமாடிக் கொண்டிருகின்றனர் இரு சக்கர ஊர்திகள் மூலம் வந்து செல்கின்றனர்.
இதனை கட்டுப்படுத்துவதே அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி காவல் ஆய்வாளர் சக்திவேல் உத்தரவின் பேரில் கவரபேட்டை காவல்உதவி ஆய்வாளர் சிவராஜ் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
வாகனத்தின் ஒலிபெருக்கி மூலம் 144 தடை உத்தரவை மீறினால் கைது நடவடிக்கை மற்றும் வாகனம் பறிமுதல் செய்ய படும் என எச்சரிக்கை கொடுக்க பட்டது.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்