அரியலூர்: 31 நாட்களில் 38 நபர்களை அரியலூர் மாவட்ட காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர் .
கொரோனா ஊரடங்கு காலத்தில் அரியலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சும், விற்கும் மற்றும் டாஸ்மாக் மதுபானங்களை கள்ளத்தனமாக விற்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த 32 நபர்களின் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து , அரியலூரை கள்ளச்சாராயம் அற்ற மாவட்டமாக மாற்றுவதே எங்கள் முக்கிய நோக்கமாகும் . மேலும் சட்ட ஒழுங்கு குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 6 நபர்களின் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.அரியலூர் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தித் கொடுப்பதை எங்கள் கடமையாகும்.