கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள், நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருந்து கொண்டிருக்கும் நிலையில் கள்ளக்குறிச்சி நகர பகுதியல் பாதுகாப்பு பணி நிலை குறித்து கள்ளக்குறிச்சி ஆய்வாளருடன் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொது மக்கள் தினமும் வெளியில் வரக்கூடாது என்றும் ஒரு முறை வந்தால் மூன்று நாளைக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அப்படி வெளியில் வரும் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுருத்தினார். சமூக இடைவெளியை நடைமுறை படுத்தாத கடைகளின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்