கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமையில் போலீசார் கல்வராயன் மலை ஈச்சங்காடு பகுதியில் சாராயவேட்டை நடத்தினர் அப்போது ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த பிச்சன் மகன் சின்னதுரை என்பவரது காட்டில் 8 பேரல்களில் இருந்த . 1600 லிட்டர் சாராய ஊரல் மற்றும் சாராயம் காய்ச்சப் பயன்படுத்தும் அடுப்பு ஆகியவற்றை கண்டுபிடித்து அவைகளை அழித்தனர். இது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு தலைமறைவு எதிரியை வலைவீசி தேடிவருகின்றனர்.