திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் காங்கேயம் உட்கோட்டம் வெள்ளகோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கன்னிவாடி பஸ் ஸ்டாப் பகுதியில் 17 வயது கல்லூரி மாணவி காணாமல் போன வழக்கின் (Cr.No.2104/20 U/s Girl missing) விசாரணையில், மாணவியை தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(23) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கல்லூரி மாணவி காணாமல் போன வழக்கு POCSO வழக்காக மாற்றம் செய்யப்பட்டு (Cr.No.2104/20 U/s. Girl missing @ 366(A) IPC 5(1),6 of Pocso Act 2012 & 506(ii) IPC), எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
திருப்பூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
M.வெங்கடாசல மூர்த்தி
திருப்பூர்