திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சின்னளபட்டி பேரூராட்சியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை கறி கடைகளை திறக்க மாட்டோம் கடை உரிமையாளர்கள் உறுதிமொழி. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பேரூராட்சி அனைத்து கடை உயிமையாளர்களான இறைச்சி, கோழி, மீன் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கான கூட்டம் மாவட்டசெயலாளர் திருமதி.கலையரசி அவய்கள் தலைமையில் நடந்தது. இதில் சின்னாளபட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.முத்தமிழ் செல்வி அவர்கள் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை கறி கடைகளை திறக்க மாட்டோம் என அதன் உரிமையாளர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா