சென்னை: காவல்துறையினர் என்றால் கடுமை என்பது தான் பொதுவாக பொதுமக்களிடையே கருத்து நிலவி வருகின்றது. அத்தகைய தவறான கருத்தை, பொய்யாக்க பல்வேறு நல்ல சம்பவங்கள் காவல்துறையில் தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. காவல்துறையினர் கடுமையானவர்கள் அல்ல கருணை உள்ளம் கொண்டவர்கள் என்பதை நிருபிக்க அம்பத்தூர் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய ஆய்வாளர் திரு.விஜயராகவன் சில தினங்களுக்கு முன்பு சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த 60 வயது மூதாட்டியும் அவரது கணவரும் இருசக்கர வாகனத்தில் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் அருகில்
வரும் போது, வேகத்தையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மூதாட்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையறிந்த காவல் ஆய்வாளர் திரு.விஜயராகவன் உடனடியாக வெளியே வந்து மூதாட்டியை ஆசுவாசப்படுத்தினார். ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், அவரை ஏற்றிச் சென்று அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.
கருணையுள்ளம் கொண்ட காவல் ஆய்வாளர் விஜயராகவன் அவர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
S. வீரமணி
குடியுரிமை நிருபர்