கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் நிறை வாழ்வு பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது . அதில் 36-வது மற்றும் 37-வது கட்ட பயிற்சியை பத்மநாபபுரம் சார் ஆட்சியர் திருமதி.சரண்யா அரி IAS , உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.விஷ்வேஸ் சாஸ்திரி IPS மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயபாஸ்கர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.