விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை உட்கோட்டம், காரியாபட்டி காவல் நிலைய சரகம், மீனாட்சிபுரத்தில் இராமச்சந்திரன் 43. மற்றும் வைரஜோதி 38. என்ற தம்பதியினரும், இவர்களுக்கு வீரபாண்டி 24. என்ற மகனும் உள்ளார்கள்.
மேற்படி வைரஜோதி என்பவர் மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தாலுகா, T.திருமால் பகுதியில் வசித்து வந்த இராமநாதன் (45) என்பவருடன் தகாத உறவில் பழகி வந்துள்ளார். இதனை வைரஜோதியின் கணவர் இராமச்சந்திரன் கண்டித்துள்ளார்.
இந்நிலையில் 13.05.2024-ம் தேதி இரவு 20.40 மணிக்கு மேற்படி இராமநாதன் இரு சக்கர வாகனத்தில் S.கல்லுப்பட்டி புளியங்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது இராமசந்திரன், வீரபாண்டி மற்றும் உறவினர் அய்யனார் ஆகியோர் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக காரியாபட்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.
மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவான குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் தனிப்படை அமைத்து, துரித நடவடிக்கை மேற்கொண்டு 13.05.2024-ம் தேதி இரவே குற்றவாளிகள் இராமசந்திரன், வீரபாண்டி, உறவினர் அய்யனார் மற்றும் வைரஜோதி ஆகியோர்கள் கைது செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.