சென்னை : சென்னை தாம்பரத்தை சேர்ந்த சுஜிதா என்பவர் தனது குழந்தையுடன் காஞ்சிபுரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வழிதவறி சென்று அழுதபடியே சாலையில் சுற்றிதிரிந்தது. அப்போது குழந்தையை கண்ட பணியில் இருந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு அதனுடன் விளையாடியபடியே சக காவலர்கள் மூலம் தாயின் இருப்பிடத்தை கண்டுபிடித்து குழந்தையை பத்திரமாக ஒப்படைத்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்















