நாகப்பட்டினம் : கண்காணிப்பு கேமராக்களின் அவசியம் குறித்து நாகப்பட்டினம் மாவட்ட பொது மக்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள்.
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டியதன் அவசியம் என் எனில் நடந்த குற்றத்தின்
உண்மைத் தன்மையை அறிய பெரிதும் உதவுகிறது எனவும் மேலும் “கண்காணிப்பு கேமராக்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தின் பாதுகாப்புக்கு அவசியம். எனவும் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளைக் கைது செய்யவும் கண்காணிப்பு கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன.
பல குற்றச் சம்பவங்கள், அசம்பாவிதங்கள், வாகன விபத்துகள் மற்றும் வன்முறை சம்பவங்களின்போது உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்கு கண்காணிப்பு கேமரா காட்சிகள் பெரிதும் உதவுகின்றன.நாகப்பட்டினம் மாவட்டத்தை கண்காணிப்பு கேமராக்களின் வளையத்துக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகிறோம் மேலும்
பாதுகாப்புக்கான மூலதனம் ஆனால் அதற்கான வேகம் அனைத்து தரப்பினரிடம் இருந்தும் வரவில்லை. இதற்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படவேண்டும். கண்காணிப்பு கேமரா என்பது நமது பாதுகாப்புக்கான ஒரு மூலதனம்” என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
மேலும் “குற்றங்களைக் குறைப்பதற்கும், தடுப்பதற்கும் முக்கிய கருவியாக கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் கண்காணிப்பு கேமராக்கள் வைப்பது காலத்தின் கட்டாயம். சிங்கப்பூரில் ஒரு பெண் இரவில் தனியாக செல்ல முடியும். அந்த அளவுக்கு அவர்களின் பாதுகாப்பு உள்ளது. அதேபோல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும்” என நாகப்பட்டினம் மாவட்ட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்