திண்டுக்கல்: திண்டுக்கல், பழனியில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை14ஆம் அணியில் ‘C’ நிறுமத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருபவர் PC-4353 K.மணிமுத்து. இவர் விருதுநகர் மாவட்டம் S.கொடிக்குளத்தை சேர்ந்தவர், தடகள வீரரும் ஆவார்.
சமீபத்தில் விடுமுறையில் இருந்த இவர் விவசாயத்தை ஊக்குவிப்புதற்காகவும், மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, உயர் அதிகாரிகளின் அனுமதியோடு இவரது ஊர் அருகே உள்ள அழகாபுரியில் இருந்து வத்திராயிருப்பு வரை கண்களை மூடிக்கொண்டு 5 கிலோமீட்டர் தொடர் ஓட்டத்தை ஓடி முடித்தார்.
இதனையறிந்த லக்னோவில் உள்ள NOBAL WORLD RECORD நிறுவனம், இவரது சாதனையை பாராட்டி, NOBAL world record புத்தகத்தில் இடம்பெறச் செய்து சான்றிதழ்களையும் பதக்கங்களும் மணி முத்துவுக்கு வழங்கி கௌரவித்தது. இதனை அடுத்து மணி முத்துவின் சாதனையை காவல்துறையினரும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா