இராமநாதபுரம் மாவட்டம் R.S.மங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக லாரியில் மணல் அள்ளிய பிரபு என்பவரை SI திரு.நாகநாதன் அவர்கள் u/s 21(4) of Mines & Minerals regulation Act -ன் கீழ் கைது செய்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் அருகேயுள்ள நெருஞ்சி பட்டி பகுதியில் கோவிலாங்குளம் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது, கஞ்சா மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த சண்முகநாதன் என்பவரை ஆய்வாளர் திருமதி.ஜான்சிராணி அவர்கள் U/S NDPS Act, Arms act & Explosive Substances Act-ன் கீழ் கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும், அவரிடமிருந்து வாள்-1, நாட்டு வெடிகுண்டு-05, கஞ்சா-1.750 Kg ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள செவல்பட்டி பகுதியில் மேரி என்ற மூதாட்டியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த யாக்கோபு என்பவரை ஆய்வாளர் திரு.தமிழ்ச்செல்வன் அவர்கள் u/s 387 IPC-ன் கீழ் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்