கோவை : கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் கடந்த (26.08.2024) அன்று சுமார் 34 கிலோ கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கோபர்தான் சமல் மகன் சஞ்சயகுமார் சமல்(40). என்பவரை பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பொது அமைதி மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சஞ்சயகுமார் சமல்(40). மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் திரு.கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப., அவர்கள் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கஞ்சா சாக்லேட் வழக்கு குற்றவாளியான சஞ்சயகுமார் சமல்(40). -யை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார். கோவை மாவட்டத்தில் இந்த வருடத்தில் இதுவரை 16 கஞ்சா வழக்கு குற்றவாளிகள் உட்பட 51 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இது போன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்