சென்னை: சென்னை, பெரம்பூர், மங்களபுரம் 1வது தெருவை சேர்ந்த தன்ராஜ் வ/32, த/பெ.நாகராஜ் என்பவர் தனது மனைவி சபரியுடன் கடந்த 21.02.2020 அன்று இரவு 21.45 மணியளவில் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது, அங்கு 2 இருசக்கர வாகனங்களில் வந்த 6 நபர்கள் மேற்படி தன்ராஜ் மற்றும் அவரது மனைவி சபரியை கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த தன்ராஜ் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து தன்ராஜின் மனைவி P-2 ஓட்டேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. இந்நிலையில் V-4 ராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.S.ராஜ்குமார் தலைமையில் காவல் குழுவினர் கடந்த 22.02.2020 அன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் ராஜமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 200 அடி ரோடு, FOR மருத்துவமனை அருகில் ரோந்து பணியிலிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக 2 இருசக்கர வாகனங்களில் வேகமாக வந்த 6 நபர்களை மடக்கிப்பிடித்து விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர்கள் 1.அஜய், வ/20, த/பெ.பாலாஜி, பெரம்பூர் 2. திலக்ராஜ், வ/23, த/பெ.குமார், பெரம்பூர் 3.விக்கி வ/21, த/பெ.ராஜேந்திரன், பெரம்பூர் 4.தொண்டை வலி வினோத், வ/24, த/பெ.ராஜேந்திரன், கீழ்ப்பாக்கம் 5.பால்பிரவின் வ/26, த/பெ.ஆலன்மைக்கேல், பெரம்பூர் 6.சாமுவேல், வ/20, த/பெ.கிஷோர், பெரம்பூர் என்பதும், மேற்படி தன்ராஜ் என்பவரை கொலை செய்துவிட்டு தப்பி வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் கத்தி-6 பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இரவு ரோந்து பணியின் போது விழிப்புடன் செயல்பட்டு கொலை குற்றவாளிகளை கைது செய்த V-4 ராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.S.ராஜ்குமார், உதவி ஆய்வாளர் திரு.S.ஆஷிக் முகம்மது, தலைமைக்காவலர்கள் S.குருமூர்த்தி (த.கா.31881), G.சரவணக்குமார் (த.கா.26146), J.சதிஷ்குமார் (த.கா.28235) மற்றும் முதல் நிலைக்காவலர் திரு.G.சரவணன் (மு.நி.கா.36535) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று 25.02.2020 நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை