திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சரக போக்குவரத்து காவல் நிலையம், நகர்ப்புற காவல் நிலையம் மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதி ஓட்டுநர் பள்ளி சங்கம் சார்பாக, இன்று 31வது சாலை பாதுகாப்பு வாரத்தினத்தை அனுசரிக்கும் விகிதத்தில், மாபெரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை ஒட்டன்சத்திரம் சரக உதவி கண்காணிப்பாளர் திரு.சீமைச்சாமி அவர்கள் பேரணியை துவக்கி வைத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஸ்ரீனிவாசன் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.விஜய் மற்றும் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர்.திரு.நல்லச்சாமி அவர்கள் தலைமையிலான காவலர்கள் வழிநடத்தினர்.
இப்பேரணி நகர்புற முக்கிய சாலைகள் வழியாக ஓட்டுநர் பள்ளி வாகனங்கள் மற்றும் நகர் புற ஆட்டோ,சரக்கு மற்றும் சுற்றுலா வாகன ஓட்டிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு கோசங்களை எழுப்பிச் சென்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா