ஐ.எஸ்.ஐ .தரச் சான்றிதழ் வழங்கும் விழா

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை உட்கோட்டத்தில் உள்ள காரியாபட்டி காவல் நிலையம் கடந்த 1868 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு, பின்பு தற்போது உள்ள புதிய கட்டத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் இக்காவல் நிலையம் இயங்கி வருகிறது. மேலும், கடந்த 1997 ஆம் ஆண்டு மல்லாங் கிணறு காவல் நிலையம் தொடங்கப்பட்டு, தற்போது உள்ள புதிய கட்டத்தில் 2009ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
பொதுமக்களுக்கு சிறந்த சேவைகளை செய்து வரும் சிறந்த காவல் நிலையங்களுக்கு இந்திய தர கவுன்சில் இந்திய அரசாங்கத்தால் பாதுகாப்பு மற்றும் சுகாதார சான்றிதழுக்கான, பணியிட மதிப்பீட்டுக்காக சர்வதேச தர கட்டுப்பாட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டி காவல் நிலையங்களை ஆய்வு செய்து மிகவும் மதிப்புமிக்க ஐ.எஸ்.ஓ. 9001:2015 சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி, தரக்கட்டுபாட்டு நிறுவனம் காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு காவல் நிலையங்களை ஆய்வு செய்து பொதுமக்களுக்கான வசதி ஆவணங்கள் பராமரிப்பு, வழக்கு விசாரணை ஆகியவை சிறந்து முறையில் பராமரிக்கப்பட்டு வருவதால், மேற்படி இரு காவல் நிலையங்களையும், இந்திய தர கவுன்சில் இந்திய அரசாங்கத்தால் பாதுகாப்பு மற்றும் சுகாதார சான்றிதழுக்கான பணியிட மதிப்பீட்டுக்காக, சர்வதேச தர கட்டுப்பாட்டுச் சான்றிதழ் வழங்க தேர்வு செய்தது. ஐ.எஸ்.ஓ . தரச்சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சி காரியாபட்டி காவல் நிலைய வளாகத்தில் நடை பெற்றது. விருதுநகர்  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா தலைமை வகித்தார்.

அருப்புக்கோட்ட உட்கோட்ட காவல் துறை துணைக்கண்காணிப்பாளர் காயத்ரி முன்னிலை வகித்தார். காரியாபட்டி இன்ஸ் பெக்டர் செந்தில் குமார் வரவேற்றார்.  இந்திய அரசு தர கவுன்சில், , முதன்மை இயக்குநர் கார்த்திகேயன் காரியாபட்டி – மல்லாங் கிணற காவல்நிலையங்களுக்கான ஐ.எஸ்.ஓ. தரச் சான்றி தழ்களை மாவட்ட
காவல் கண்காணிப்பாளர்.கா.பெரோஸ்கான், அப்துல்லாவிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் , மாவட்டக்காவல் கணகாணிப்பாளர் பேசும் போது சென்னை போன்ற பெருநகரங்களில் இயங்கி வரும் காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில், முதன் முறையாக பேரூராட்சிக்
குட்பட்ட பகுதியில், இயங்கி வரும் காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு காவல் நிலையங்களின செயல்பாடு களை கண்டறிந்து ஐ.எஸ்.ஓ. 9001:2015 சான்றிதழ வழங்கப்பட்டுள்ளதை பெருமையாக கருதுகிறோம்.

மேலும் , இச்சான்றிதழ் பெறுவதற்காக பாடுபட்ட காவல் நிலைஅதிகாரிகள், காவலர்கள் , ஊர் பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இது போன்று, மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல்நிலையமும் சிறப்பாக செயல்பட்டு நல்ல முறையில் பராமரித்தபொதுமக்களிடையே நல்லுறவு பேன வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில், காரியாபட்டி காவல் நிலைய சப் இன்ஸ் பெக்டர் அசோக் குமார், மல்லாங் கி ணர் சப் இன்ஸ்பெக்டர் மகேஸ் குமார், பேரூராட்சித் தலைவர் செந்தில், காரியாபட்டி ஒன்றிய கழக செய லாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர்தங்க தமிழ்வாணன், எஸ்.பி.எம். நிறுவன தலைவர் அழகர்சாமி,சுரபி நிறுவன தலைவர் விக்டர். வழக்கறிஞர் சங்க துணை செயலாளர் செந்தில் குமார், கவுன்சிலர் முகமது முஸ்தபா, ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் செல்வராஜ், பிச்சை பாண்டி காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் , ஆனந்தகுமார், சொக்கப் பன் கலைச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர். சப்.இன்ஸ்பெக்டர் அசோக் குமார் நன்றி கூறினார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.