திண்டுக்கல் : தமிழக அரசு 01.09.2020 முதல் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள், அறநிலையத்துறை ஊழியர்கள், கல்யாண மண்டப உரிமையாளர்கள் , ஆட்டோ ஓட்டுநர்கள், முக்கிய நிறுவனங்களின் உரிமையாளர்களை நேரடியாகச் சென்று காவல்துறையினர் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பது குறித்தும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணிகளை மேற்கொள்ளும் படியும் அறிவுரை கூறினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.அழகுராஜா
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.அழகுராஜா