திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் ஊரடங்கு உத்தரவால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மலைக்கோவிலில் இருக்கும் குரங்குகள் பக்தர்கள் தரும் உணவுகளை உண்டு வாழ்ந்து வருகின்றன. தற்போது பக்தர்கள் இல்லாத காரணத்தால் அவைகள் உணவின்றி இருந்தன. மலை கோவிலுக்கு பணிக்கு செல்லும் திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் 219 திரு.பகவதி ராஜ் அவர்கள் பசியால் வாடும் குரங்குகளை கண்டு தினந்தோறும் பிஸ்கட், வாழைப்பழம் போன்ற உணவு பொருட்களை கொண்டு சென்று அங்குள்ள குரங்குகளுக்கு உணவளித்தார். இவர் வருவதை கண்டதும் குரங்குகள் ஆரவாரத்துடன் ஓடிச் சென்று அவர் அருகில் நின்று கொள்ளும். இவரது செயலை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா