அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலைய சரகம் ஜெயங்கொண்டம் நகரம்,சின்ன வளையம்,புதுச்சாவடி கிராமங்களில் சாலையோரம் வசித்துவரும் குடும்பங்களின் பசியினனை போக்க அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் 10/04/2020 அன்று அரிசி, பருப்பு,சோப்பு,காய்கறி உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பை, 50க்கும் மேற்பட்ட குடும்பத்திற்கு அளித்தார். மேலும் ஊரடங்கு உத்தரவை மதித்து வீட்டில் இருக்கும் அறிவுறுத்தினார்.உடன் ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மோகனதாஸ் அவர்கள் இருந்தார்கள்.