திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மணிமாறன் என்பவர் கேபிள் டிவி ஆபரேட்டராக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட குளத்துப்பட்டியில் வீடு ஒன்று உள்ளது. இவ்வீட்டிற்கு அவ்வப்போது தனது குடும்பத்துடன் வந்து செல்வார்.
சம்பவத்தன்று 20.09.19 தனது வீட்டுக்கு வந்து பார்க்கும் போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த குளிர்சாதனப்பெட்டி, டிவி, கட்டில் உட்பட 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து மணிமாறன் வத்தலகுண்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரினை தொடர்ந்து நிலைய ஆய்வாளர் திரு.பிச்சை பாண்டி அவர்களின் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் SI திரு.சேகர், Gr.I 673 திரு.முத்துப்பாண்டி , Gr.I 1734 திரு. மூர்த்தி மற்றும் மாவட்ட Cyber Crime உதவியுடன் தேடி வந்த நிலையில் திருடப்பட்ட பொருட்கள் நிலக்கோட்டை அருகே உள்ள பெட்டிசெட்டியபட்டியிலும், சிலுக்குவார்பட்டி உள்ள கொள்ளையர்களின் வீட்டிலும் இருப்பது தெரியவந்து,
விரைந்து சென்ற தனிப்படை போலீசார், பெருமாள் மற்றும் ரவி என்பவர்களை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.