திருநெல்வேலி : கொரோனா நோய்தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி 12.09.2020-ம் தேதியன்று, உயிர்நீத்த தச்சநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் திரு.முருகன் அவர்களின் நினைவாக தச்சநல்லூர் கரையிருப்பில் அவரது குடும்பத்தினர் ஏற்பாட்டில் நூலகத்துடன் கூடிய புறக்காவல் நிலையம் கட்டப்பட்டு, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.தீபக் M.டாமோர் IPS அவர்களால், ரிப்பன் வெட்டி திறந்து வைத்து திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப் பட்டது.
இந்த புறக் காவல் நிலையத்தை சுற்றி வசிக்கும் மாணவர்கள் போட்டி தேர்வு எழுத உதவும் வகையில் தேவையான 400 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன . மாணவர்கள் தங்கள் முகவரி , போன் நம்பர் அளித்து ஒரு சமயத்தில் இரண்டு புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வேளாண்மை , உணவு, தன்னம்பிக்கை, வாழ்க்கை வரலாறு, அறிவியல் தொடர்பான புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன.
புறக் காவல் நிலையத்தை சுற்றி மரக்கன்றுகளும் நடப்பட்டது. சிறப்பாக ஏற்பாடுகள் செய்த டவுன் உட்கோட்ட காவல் உதவி ஆணையாளர் சதீஷ்குமார் மற்றும் தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் வனசுந்தர் ஆகியோருக்கு திருநெல்வேலி மாநகரம் காவல் துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) ச. சரவணன் பாராட்டுக்களை தெரிவித்தார்.