ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள நசினூர் சாலையில் தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த ஈரோடு கே.எஸ்.நகரரைச்சேர்ந்த பாலமுரளி(42), என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் கோபி அடுத்த மொடச்சூர் உழவர் சந்தை அருகே கஞ்சா விற்ற கோட்டை மேடு பகுதியை சேர்ந்த கீரிவாய் என்ற நடராஜன் (53) என்பவரை கைது செய்தனர்.