ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை காவல் நிலையத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று ஈரோடு மாவட்டம் சென்னிமலை காவல் நிலையம் மற்றும் பெருந்துறை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகங்களில் காவலர் தினம் அனுசரிக்கபட்டது.
இந்த நிகழ்வில் பெருந்துறை காவல் துணை காணிப்பாளர் திரு கௌதம் கோயல் IPS அவர்கள் சென்னிமலை காவல் ஆய்வாளர் திரு. சரவணன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர் மற்றும் காவலர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பாகவும், நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவர் மற்றும் காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, அரசியல் நிருபர்கள் பிரிவு ஈரோடு மாவட்ட தலைவர் திரு.கிருஷ்ணமூர்த்தி, அரசியல் நிருபர்கள் பிரிவு ஈரோடு மாவட்ட பொது செயலாளர் திரு.செந்தில் குமார் நேரில் சென்று காவல்துறையினர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி காவலர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.