ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு காவல்நிலையங்கள் ஈரோடு கோபியில் உள்ளன. இந்த இரு காவல் நிலையங்களில் பணியாற்றிய காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பிற காவல்நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளனர். ஈரோடு கோபி ஆகிய மதுவிலக்கு பிரிவு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 20 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 21 போலிசாரை பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளனர். அதன்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வெள்ளியங்கிரி, வடிவேலு, கந்தசாமி, உள்ளிட்ட 20 பேர் பல்வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யபட்டுள்ளனர். இதேபோல் போலிஸ் ஜிப் டிரைவரான ராஜா ஆயுதபடைக்கு மாற்றம் செய்யபட்டுள்ளார்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா