திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த மெதூரில் பொதுமக்களுக்கான இலவச மெகா மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் மருத்துவத்துறையின் மிக உயரிய பரிசோதனை கருவிகளான உடல் அமைப்பு பகுப்பாய்வு பரிசோதனை,எலும்பு கனிம அடர்த்தி பரிசோதனை, இதய பரிசோதனை, மார்பு எக்ஸ்ரே பரிசோதனை மற்றும் பொது மருத்துவ ஆலோசனை, இரத்த அழுத்த பரிசோதனை, கண், பல் பரிசோதனை மற்றும் சிகிச்சை, உயிர் சத்து மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனை உடன் ஆலோசனை பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் முகாம் நடைபெற்றது.
புஸ் அப்ஸ் பிரைவேட் லிமிடெட் ஸ்ரீ சாய்ராம் ஆசிரமம் மற்றும் ஜிப்மர் ஹெல்த் கேர் இணைந்து நடத்திய இந்த இந்த முகாமினை பாரத ரத்னா. டாக்டர். ராமகிருஷ்ணன் முகாமினை துவக்கி வைத்தார். இந்த முகாமில் மருத்துவர்கள் கந்த பிரணப், ஐஸ்வர்யா,அபிராமி,பாலாஜி உள்ளிட்டோர் தனித்தனி பிரிவாக சிகிச்சைகளை வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கௌதம் ஏற்பாடு செய்ய அவருடன் மெதுர் ஊராட்சி செயலர் தரணி எனும் தமிழரசன் சமூக ஆர்வலர்கள் சண்முக பிரியன், வழக்கறிஞர்கள் ஜெயகாந்தன், ரமேஷ், பாக்கம், விஜய், செந்தில்குமார், ரஜினி, ராஜேஷ் உள்ளிட்டோர் இணைந்து செய்தனர். இந்த முகாமில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு