இராமநாதபுரம் : காவலர்களின் உழைப்பையும், அவர்களுடைய சாதனைகளை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 24 அன்று காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், சந்தோஷப்படுத்தும் விதமாகவும் வருடத்தில் ஒருமுறை நாடு முழுவதும் உள்ள காவலர்களுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புடன் நினைவு பரிசுகளையும் வழங்கி அவர்களை போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்கள் மூலம் ஊக்குவித்து கௌரவப்படுத்தி வருகின்றது.
காவலர் தினத்தை முன்னிட்டு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பாக, நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவர் மற்றும் காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் டவுன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சதீஸ் குமார், அவர்களுக்கு நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா, இராமநாதபுரம் மாவட்ட துணை பொது செயலாளர் திரு.நம்புகுமார் மற்றும் குடியுரிமை நிருபர்கள், காவலர் தின வாழ்த்து தெரிவித்து, இனிப்புகள் வழங்கி போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
அக்காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அனைவருக்கும் காவலர்கள் தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
காவலர்கள் தினம் குறித்து மேலும் அறிந்து கொள்ள www.nationalpoliceday.in