இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே குளிர்பான கடை ஒன்றில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த செய்யது அகமது நசீர் என்பவரை தொண்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சரவணன் அவர்கள் u/s 21(1) of Cigarette and Tobacco Act-ன் கீழ் கைது செய்தார். இராமநாதபுரம் மாவட்டம் காவனூர் பகுதியில் அரசு அனுமதியின்றி, சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் அள்ளிய முருகன் என்பவரை பஜார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ஜோதிமுருகன் அவர்கள் u/s 21(A) Mines and Minerals development regulation Act-ன் கீழ் கைது செய்தார். இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பெரியபட்டிணம் அருகே அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் அள்ளிய வினோத், செய்யது ஹரிஷ் ஆகிய இருவரையும் SI திரு.வசந்த குமார் அவர்கள் u/s 21(1) Mines & Minarels Act -ன் கீழ் கைது செய்தார்.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்