இராமநாதபுரம் : நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொது மக்களின் பாதுகாப்பிற்காக ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் இராமநாதபுரம் ஆப்பநாடு பகுதியில் உள்ள சாலையில் உள்ள ஆதரவற்ற 20 முதியவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர் திரு.முனியசாமி அவர்களால் வழங்கப்பட்டது.