இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை மற்றும் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு (பரமக்குடி நகர் காவல் நிலையம்) திருமதி.அமுதா அவர்கள் தலைமையிலான போலீசாருக்கு 14.11.2019-ம் தேதி கிடைத்த தகவலின் அடிப்படையில் கஞ்சா வைத்திருந்த 03 பேரை NDPS ACT-ன் பிரகாரம் வழக்குப்பதிவு செய்து, அவர்களிடமிருந்து 1.1 கிலோகிராம் கஞ்சாவையும் கைப்பற்றினர்.
மேற்படி எதிரிகள் குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்கள் முன்னர் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.